போத்தனூர், தூத்துக்குடி வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்கள்… முன்பதிவு தொடக்கம்!

 
ரயில் டிக்கெட்
 

 

போத்தனூரில் இருந்து சென்னை சென்டிரல் செல்லும் சிறப்பு ரெயில் (06194) வருகிற 8ம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்னை சென்டிரல் வந்து சேருகிறது. மறுமார்க்கத்தில் சென்னை சென்டிரலில் இருந்து போத்தனூர் செல்லும் சிறப்பு ரெயில் (06193) வருகிற 9ம் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.05 மணிக்கு போத்தனூர் சென்றடைகிறது.

ஏசி ரயில்

இதுபோல், சென்னை சென்டிரலில் இருந்து தூத்துக்குடி செல்லும் சிறப்பு ரெயில் (06151) வருகிற 12 மற்றும் 19ம் தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.15 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்டிரல் செல்லும் சிறப்பு ரயில் (06152) வருகிற 13 மற்றும் 20ம் தேதிகளில் மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

பொங்கல் ரயில்

இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது. போத்தனூர் – சென்னை சென்டிரல் மற்றும் சென்னை – தூத்துக்குடி ரெயில்களுக்கான டிக்கெட்டுகள் வேகமாக முன்பதிவு செய்யப்பட்டு வருவதால், பயணிகள் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளுமாறு ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!