இன்று கடற்கரை - வேளச்சேரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!
பொங்கல் பண்டிகை முடிந்து மக்கள் சென்னை திரும்பத் தொடங்கியுள்ளதால், நகருக்குள் ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைக்கத் தெற்கு ரயில்வே இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இன்று சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரிக்கு மதியம் 2:50 மணி, மாலை 4:55 மணி, மாலை 6:50 மணிக்கும், வேளச்சேரியிலிருந்து சென்னை கடற்கரைக்கு மதியம் 1:30 மணி, மாலை 4:00 மணி, மாலை 5:45 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் பறக்கும் ரயில்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். ஆனால், இன்று காணும் பொங்கல் மற்றும் விடுமுறை முடிந்து வெளியூர்களிலிருந்து திரும்புபவர்கள் எழும்பூர் அல்லது சென்ட்ரல் ரயில் நிலையங்களிலிருந்து நகரின் மற்ற பகுதிகளுக்குச் செல்ல ஏதுவாக இந்தச் சிறப்பு ரயில்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
