பொங்கலுக்கு 34 சிறப்பு ரயில்கள்.... பயணிகள் மகிழ்ச்சி…!

 
pongal

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து 20 வழித்தடங்களில் 34 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பண்டிகை நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

pongal

வரும் 11-ம் தேதி முதல் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய நிலையங்களில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, கோவை, மதுரை, ராமேஸ்வரம், ஈரோடு, செங்கோட்டை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ரயில்கள் செல்லும். மொத்தம் 20 வழித்தடங்களில் 34 ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

பொங்கல் ரயில்

பயணிகள் ரயில்வே முன்பதிவு இணையதளம் மூலமாகவும், ரயில் நிலைய கவுண்ட்டர்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஏற்கனவே பொங்கலுக்கான வழக்கமான ரயில்களின் முன்பதிவு கடந்த அக்டோபரிலேயே சில மணி நேரங்களில் நிறைவடைந்தது. இதனால் இந்த சிறப்பு ரயில்கள் பயணிகளுக்கு பெரிய நிம்மதியாக அமைந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!