தைப்பூசத்திற்கு சிறப்பு ரயில்கள் ... தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர் – நெல்லை மற்றும் தாம்பரம் – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பக்தர்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06001) மறுநாள் காலை 11.15 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக, நெல்லையில் இருந்து வருகிற 1-ந்தேதி இரவு 10.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06002), மறுநாள் காலை 9.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

மேலும், நாளை (சனிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06003), மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். தூத்துக்குடியில் இருந்து வருகிற 1-ந்தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06004), மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
