நாளை தமிழகம் முழுவதும் 75000 மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாம்...
தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள், ஜனவரி 3 மற்றும் 4 தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இது நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது.

இந்த முகாம்களில் புதியதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான பிழைகளை சரி செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தகுதியுள்ள அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். முகாம் நடைபெறும் நாட்களில் நேரில் சென்று தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
