ஜனவரி 1 முதல் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் அதிகரிப்பு!

 
 சிறப்பு ரயில்

தெற்கு ரெயில்வேயின் புதிய கால அட்டவணை வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதுடன், புதிய ரெயில்கள், சேவை நீட்டிப்பு, புதிய நிறுத்தங்கள், வேக உயர்வு, கூடுதல் பெட்டிகள் இணைப்பு உள்ளிட்ட பல மாற்றங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. நடப்பாண்டில் 8 புதிய ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

எக்ஸ்பிரஸ் ரயில்

மேலும் 4 ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. 44 எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், 102 எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. 22 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், 7 வந்தே பாரத் ரயில்களில் கூடுதலாக 40 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

ரயில் முன்பதிவு

இதேபோல் ஜனவரி 1 முதல் 65 மெயில், எக்ஸ்பிரஸ், அதிவிரைவு ரயில்களும், 14 பயணிகள் ரெயில்களும் வேகமாக இயக்கப்பட உள்ளன. இதனால் 5 முதல் 85 நிமிடங்கள் வரை பயண நேரம் சேமிக்கப்படும். பொதிகை, முத்துநகர், கொல்லம்–தாம்பரம், கோவை–ராமேசுவரம் உள்ளிட்ட பல முக்கிய ரயில்கள் முன்கூட்டியே சென்றடையும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!