23 வயசு தான்... இருசக்கர வாகனத்தில் 100ல் அதிவேகம்... பரிதாபப் பலி!

சென்னையில் ஆவடி, காமராஜர் நகரில் 6 வது தெருவில் வசித்து வருபவர் 23 வயது மணிகண்டன். இவர் மதுபானம் அருந்தும் பழக்கம் கொண்டவர் ஆவார். இவர் நேற்று முன்தினம் இரவில், மதுபானம் அருந்திய மணிகண்டன், தனது யமஹா எம்.டி இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார். இவருடன், திருநின்றவூர் பகுதியில் வசித்து வரும் மணிகண்ட நின்னன்பர் 22 வயது தீனதயாளனும் இருந்தார்.
இருவரும் இருசக்கர வாகனத்தில் கொள்ளுமேடு, சரஸ்வதி நகர் பகுதியில் அதிவேகத்தில் சென்றபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை வாகனம் இழந்தது.
அப்போது, சாலையோரம் இருந்த கால்வாயில் இருவரும் விழுந்த நிலையில், படுகாயம் அடைந்த மணிகண்டன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தீனதயாளன் தொடர்ந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!