பேருந்துக்காக காத்திருந்தவர்களை மோதிய அதிவேக கார்… 3 பேர் பலி!

 
theni
 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நாராயணசடனம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (28), தேனியில் இருந்து மதுரை நோக்கி காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே க.விலக்கு நான்கு சாலை சந்திப்பு பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் பேருந்துக்காக காத்திருந்த 4 பேர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு காயமடைந்த கண்டமனூர் வேலாயுதபுரத்தை சேர்ந்த பால்ராஜ் (75), செல்வம் (50), ஏரதி மக்கள்பட்டியை சேர்ந்த மாரியம்மாள் (60), மதுரை அரசரடியை சேர்ந்த பாக்கியலட்சுமி (39) ஆகியோர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பால்ராஜ், செல்வம், மாரியம்மாள் ஆகியோர் உயிரிழந்தனர்.

பாக்கியலட்சுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிந்து, காரை ஓட்டி வந்த அஜித்குமாரை கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!