கண்களை கட்டிக் கொண்டு சிறுமி உலக சாதனை!! ஒரே நிமிடத்தில் 146 முறை சிலம்பம் சுழற்றி அசத்தல்!!

 
அகல்யா

தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில் சிலம்பம் தேசிய விளையாட்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல பகுதிகளிலும் சிலம்ப பயிற்சி கூடங்கள் முளைக்க தொடங்கியுள்ளன. அந்த வகையில் கோவையில்  6 வயது சிறுமி கண்களை கட்டிக் கொண்டு  ஒரு நிமிடத்தில் 146 முறை சிலம்பம் சுழற்றி சாதனையை நிகழ்த்தியுள்ளார். இச்செயல்   அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கோவை வெள்ளலூர் பகுதியில் வசித்து வருபவர்  கதிர்வேல்ராஜ், இசைவாணி தம்பதியரின் 6வயது மகள் அகல்யா. இவர் சிறு வயதிலிருந்து சிலம்பத்தை ஆர்வத்துடன் கற்றுக் கொண்டு வருகிறார்.  தமிழகத்தின் பாரம்பரிய கலையான சிலம்ப கலையை மீட்டெடுத்து அனைவரிடமும் கொண்டு செல்லும் முயற்சியாக சிறுமி அகல்யா கண்களை கட்டிக்கொண்டு 1 நிமிடத்தில் 146 முறை சிலம்பத்தை சுழற்றி உலக சாதனையை நிகழ்த்தினார்.

அகல்யா

கண்களை கட்டிக்கொண்டு சாதனை நிகழ்த்திய சிறுமி துபாய் ஐன்ஸ்டின் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஏற்கனவே 1 நிமிடத்தில் 57 முறை சிலம்பம் சுழற்றியது தான் சாதனையாக இருந்து வந்தது. தற்போது சிறுமி அகல்யா முறியடித்துள்ளார். இதற்கு  உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. சிறுமியின் இந்த சாதனை துபாய் ஐன்ஸ்டின் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web