விளையாட்டால் விபரீதம்!! பள்ளி மாணவர்கள் தாக்கியதில் சகமாணவன் உயிரிழப்பு !!

 
மௌலீஸ்வரன்

பள்ளிகளில் மாணவர்கள் விபரீத விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர். இதனால் சில நேரங்களில் பெரும் அசம்பாவிதங்கள் நடைபெற்று விடுகின்றன. இன்றைய இளைய தலைமுறை மாணவர்கள் மூர்க்கத்தனமாக விளையாடுகின்றனர். தவறுகளை பார்த்து பயப்படவே செய்யாத தலைமுறையாக உருவெடுத்து வருவது எதிர்காலத்தை குறித்த அச்சத்தை ஏற்படுத்தி விடுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பால சமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் தோளூர் பட்டியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்து வரும் கோபி என்பவரின் மகன் மௌலீஸ்வரன் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பள்ளி வளாகத்தில் அமர்ந்து மாணவர்கள் பலரும் படித்துள்ளனர். அப்போது சக மாணவர்கள் ஒருவர் மீது ஒருவராய் சிறு சிறு கற்களை தூக்கி போட்டு விளையாடியதாகத் தெரிகிறது. 

மௌலீஸ்வரன்

இதில் சக மாணவர்கள் மௌலீஸ்வரன் தான் கற்களை தூக்கி வீசியதாகத் தவறாக எண்ணி மாணவன் மெளலீஸ்வரனை 3 மாணவர்கள் சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மாணவனை மௌலீஸ்வரன் மயங்கியதால் ஆசிரியர்கள், சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அங்கிருந்த ஆசிரியர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் மௌலீஸ்வரனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மாணவன் மெளலீஸ்வரன் கொண்டு செல்லப்பட்டார். மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மெளலீஸ்வரனின் பெற்றோர், உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு மாணவனின் இறப்புக்கு நியாயம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி - நாமக்கல் சாலையில் போக்குவரத்து பாதித்தது. 

மௌலீஸ்வரன்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின், மௌலீஸ்வரனை தாக்கிய மூன்று மாணவர்களை தனியாக அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவர்கள் தாக்கியதில் சக மாணவர் உயிரிழந்நதது அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web