ஸ்..ப்ப்பா... வெய்யிலை விட கொடுமையா இருக்கு.... வரலாற்றில் புதிய உச்சம்.. தங்கம் சவரனுக்கு ரூ.720 உயர்ந்தது! வெறிச்சோடிய நகைக்கடைகள்!

 
மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!!

ஒரு பக்கம் வெச்சு செய்யுது வெய்யில் என்று நினைத்தால், இன்னொரு பக்கம் மூச்சு விடக் கூட  முடியாத அளவுக்கு பால், தயிர், மோர்ன்னு ஆரம்பிச்சு அரிசி, எண்ணெய், வீட்டு வாடகை, கரண்ட் பில், குவர்ட்டர் பாட்டில்னு அனைத்து விலைகளுமே அதிகரித்து தான் வருகின்றன. சும்மா  ஊர் சுத்திக்கிட்டிருக்கியா? என பெட்ரோல், டீசல் விலையைக் கூட ஜெட் வேகத்தில் ஏற்றி,  உயர்த்தி வைத்து அழகு பார்க்கிறது அரசு.

அம்பானி வீட்டு விழாவுல கைத் தொடைக்க ரூ.500 நோட்டுன்னு வைரலாகிக்கிட்டு இருக்கு. டம்மி நோட்டா இருந்தாலும் அவரு விளையாடலாம்... நாம நெனைச்சுப் பார்க்க முடியுமா? சரி விஷயத்துக்கு வருவோம்.. தங்கமே மறந்துடுன்னு காதலிக்கிட்ட தான் சொல்ல முடியாது... ஆனா தங்கத்தைத் மறந்துடுன்னு தாராளமா சொல்லலாம். போற போக்கைப் பார்த்தா தங்கத்தின் விலை அப்படித்தான் இருக்கு. சென்னையில் இன்றைய காலை நேர விலை விபரப்படி ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.90 அதிகரித்து அதிர்ச்சியை அளித்திருக்கிறது. ஒரு சவரனுக்கு ரூ.720 அதிகரித்து விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது. இன்று பங்குனி உத்திர திருநாள் என்பதால், நகை வாங்க ஆர்வமுடன் சென்ற பெண்கள், இந்த திடீர் விலை உயர்வையடுத்து, நகைகளை வாங்காமலேயே ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

gold

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 90 ரூபாய் உயர்ந்து, ரூ.5,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து, ரூ.44,520-க்கு விற்பனையாகிறது.

அதே போல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,587-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 74 ரூபாய் உயர்ந்து, ரூ.4,661-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 77,800 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 2,900 ரூபாய் உயர்ந்து, ரூ.80,700-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web