இலங்கையில் அவசரநிலை பிரகடனம்... பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு; 176 பேர் மாயம்!

 
இலங்கை நிலச்சரிவு

இலங்கை, 'டிட்வா' புயலின் கோரத்தாண்டவத்தால் நிலைகுலைந்து போயுள்ளது. வரலாறு காணாத அளவு கனமழை, காட்டாற்று வெள்ளம், மற்றும் சூறாவளியால் நாட்டின் முக்கால்வாசி மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது.

டிட்வா புயலின் கடுமையான சேதாரம் காரணமாக, இதுவரை 176 பேர் காணாமல் போயுள்ளதாக இலங்கை அனர்த்த நிலையம் அறிவித்துள்ளது. மேலும், மலையகப் பகுதிகள் உட்படப் பல மாகாணங்களில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு, இலட்சக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை வெள்ளம்

புயலின் சேதாரம் மற்றும் நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கை அரசு நாடு முழுவதும் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருந்து மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகளை அதிபர் அநுரகுமார திசாநாயக்க நேரடியாகக் கண்காணித்து வருகிறார்.

அனுராதபுரம் - புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளத்தில் சிக்கிய ஒரு பேருந்தில் இருந்த 67 பயணிகள் கடற்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நேரடியாகச் சென்று மக்களைக் காப்பாற்ற முடியாத சூழ்நிலையில், ஹெலிகாப்டர்களை அதிகம் பயன்படுத்துமாறு அதிபர் உத்தரவிட்டுள்ளார். இலங்கை கடற்படையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் அதிகாலை முதலே மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை கனமழை

இந்த அவசரகாலச் சூழலில், இலங்கையில் உள்ள இந்தியப் பயணிகள் மற்றும் குடிமக்களுக்கு உதவ இந்தியத் தூதரகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்கே சர்வதேச விமான நிலையத்தில் இந்தியத் தூதரகம் அவசர உதவி மையத்தை அமைத்துள்ளது. அத்துடன், துபாயில் இருந்து இலங்கை வழியாக இந்தியா புறப்பட்ட விமானம் ஒன்று கொழும்பில் முன் எச்சரிக்கையாகத் தரையிறக்கப்பட்டதால், அதில் இருந்த 300-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கும் தேவையான உணவு, குடிநீர் மற்றும் சகல உதவிகளையும் இந்தியத் தூதரகம் வழங்கி வருகிறது. உதவிகள் தேவைப்படும் இந்தியப் பயணிகள் +94773727832 என்ற அவசர உதவித் தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!