இலங்கை கடினமான காலங்களில் கைகொடுக்கும் உற்ற தோழன்... பிரதமர் மோடி புகழாரம்!

இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இலங்கை நாட்டிற்கு சென்றுள்ளார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை அதிபர் அநுர திசாநாயக்க உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பிரதமர் மோடி மீனவர்கள் வாழ்வாதார பிரச்னை குறித்து பேசினோம். மனிதாபிமான அடிப்படையில் மீனவர்கள் பிரச்னையை அணுக இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளோம். கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பி அனுப்பவும் வலியுறுத்தியுள்ளோம்.
இலங்கைக்கு வழங்கிய கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. கடினமான காலங்களில் கைகொடுக்கும் உற்ற தோழன் இலங்கை. அனைத்து தடைகளையும் தாண்டி வலுவான நிலைக்கு இலங்கை வந்துள்ளது. தமிழர் பகுதிகளில் 10,000 வீடுகள் கட்டித்தரப்படும் என கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!