தொடரும் அட்டூழியம்... தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ கிராமத்தில் வசித்து வரும் மீனவர்கள் 10 பேர் 2 பைபர் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தனர்.
அப்போது, இலங்கை கடற்கொள்ளையர்கள் அவர்களைத் தாக்கி, மீன்பிடி வலைகள், தளவாடப் பொருட்கள் மற்றும் பிடித்த மீன்களை பறித்துச் சென்றுவிட்டனர். இந்தத் தாக்குதல் நாகை மீனவர்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்ற சம்பவங்கள் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது அவ்வப்போது நடத்தப்படுவதாகவும், இது தொடர்கதையாகி வருவதாகவும் உள்ளது.ஒரு பக்கம் இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்யும் சம்பவங்களும் , மற்றொரு பக்கம் இலங்கை கடற்கொள்ளையர்களும் மீனவர்களை தாக்கி அவர்களின் பொருட்களை அள்ளி செல்லும் சம்பவங்களும் நடைபெற்று தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!