திருப்பதியில் 3 நாட்களுக்கு ஸ்ரீவாணி ஆஃப்லைன் தரிசனம் ரத்து!

 
திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!
 

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால், ஸ்ரீவாணி ஆஃப்லைன் தரிசன டிக்கெட்டுகள் 3 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. டிசம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் இந்த டிக்கெட்டுகள் வழங்கப்படாது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி கார்த்திகை திருவிழா

நாடு முழுவதும் ஏழுமலையான் கோயில்கள் கட்டுவதற்காக ஸ்ரீவாணி அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு, விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இணையதளம் மூலமாகவும், திருமலைக்கு நேரடியாக வந்தும் நன்கொடை வழங்கும் வசதி உள்ளது.

திருப்பதி

நன்கொடை வழங்கிய பிறகு பக்தர்கள் தங்களுக்கு விருப்பமான நாளில் தரிசன டிக்கெட் பெற்று ஏழுமலையானை தரிசிக்க முடியும். ஆனால் தற்போதைய கூட்ட நெரிசலை காரணமாகக் கொண்டு, திருமலையில் உள்ள ஸ்ரீவாணி தரிசன கவுண்டரிலும், திருப்பதியில் உள்ள ரேணிகுண்டா விமான நிலையத்திலும் ஆஃப்லைன் டிக்கெட்டுகள் வழங்கப்படாது. இதை கருத்தில் கொண்டு பக்தர்கள் தங்கள் தரிசன திட்டங்களை அமைத்துக் கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!