மயிலாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஸ்ரீதேவி நினைவலைகள்!

 
ஸ்ரீதேவி
 தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்திய திரையுலகில் முண்ணனி நடிகையாக முத்திரை பதித்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர்  தமிழில்  ‘கந்தன் கருணை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ‘துணைவன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். தமிழில்  ரஜினி, கமல் இவர்களுடன்  முண்ணனி கதாநாயகியாக கால்பதித்து  தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் தடம் பதித்தார்.  ஸ்ரீதேவி கடந்த 50 ஆண்டு கால சினிமா வாழ்வில் 300க்கும் அதிகமான படங்களில் நடித்து பத்மஸ்ரீ, தேசிய திரைப்பட விருது, பல ஃபிலிம்ஃபேர் விருதுகள், மாநில அரசு விருதுகள் மற்றும் சர்வதேச விருதுகளையும் வென்றவர்.

ஸ்ரீதேவி

 ஸ்ரீதேவி 1996ல் பாலிவுட்டில் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஜான்வி மற்றும் குஷி என இரு மகள்கள். அதன் பிறகும் நடிப்பில் முத்திரை பதித்து வந்த ஸ்ரீதேவி கடைசியாக ‘இங்கிலீஷ் விங்கிலிஷ்’ ‘ மாம்’ படங்களில் நடித்திருந்தார். 2018 ல்  பாத்ரூம் தொட்டியில் விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் இந்திய திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவரது வாழ்கை வரலாறு தற்போது புத்தகமாக வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்புத்தகம்  ‘ஸ்ரீதேவி- தி லைஃப் ஆஃப் எ லெஜண்ட்’ என்ற பெயரில் வரவிருக்கிறது. இந்தப்புத்தகத்தை தீரஜ் குமார் எழுதியுள்ளார். இப்புத்தகம் குறித்து இவரின் கணவர் போனி கபூர்  “ஸ்ரீதேவி இயற்கையின் சக்தி. தனது கலையை அவர் திரையில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டபோது மகிழ்ச்சியாக இருந்தார்.

அதேசமயம், அவர் தனிமை விரும்பியாகவும் இருந்தார். தீரஜ்குமாரை ஸ்ரீதேவி தனது குடும்பத்தில் ஒருவராகவும் கருதினார். அவர் ஒரு ஆய்வாளர், எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர். ஸ்ரீதேவியின் அசாதாரண வாழ்க்கையை அவர் புத்தகமாக எழுதுகிறார் என்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” எனக் கூறியுள்ளார். இந்த புத்தகத்தை எழுதிய தீரஜ் குமார் “ மதிப்பிற்குரிய வெஸ்ட்லாண்ட் புக்ஸ் எனது அறிமுக புத்தகத்தை பதிப்பித்து வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய லிட்டரரி ஏஜெண்ட் அனிஷ் சண்டி இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். போனி கபூர் மற்றும் அவரது குடும்பம், லதா மற்றும் சஞ்சய் ராமஸ்வாமி, சூர்யகலா, மகேஷ்வரி மற்றும் கார்த்திக், ரீனா மற்றும் சந்தீப் மார்வா ஆகியோர் எனக்கு அளித்துள்ள ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார். 

ஸ்ரீதேவி
வெஸ்ட்லாண்ட் புத்தக நிர்வாக ஆசிரியர் “ இந்த புத்தகத்தில் முதலில் என்னை ஈர்த்தது அதன் பின்னால் இருக்கக்கூடிய ஆராய்ச்சிதான். ஸ்ரீதேவி மற்றும் அவரது குடும்பத்துடன் தீரஜ் குமாருக்கு இருக்கக்கூடிய நட்பு ஸ்டார் ஸ்ரீதேவியின் தனிப்பட்ட உலகத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள உதவுகிறது. ஸ்ரீதேவி எனும் ஐகானைப் பற்றி வாசகர்கள் இன்னும் தெரிந்து கொள்ள இந்தப் புத்தகம் உதவுகிறது.” எனக் கூறியுள்ளார். ச்பாந்தமான நடிப்பு, அமைதியான சுபாவம், அன்பான குணம் என வாழ்நாள் முழுவதும் வலம் வந்தர் நடிகை ஸ்ரீதேவி.திரை வாழ்க்கை
ஸ்ரீதேவி 1963  ஆகஸ்ட் 13ம் தேதி சிவகாசி  மீனம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர் ஐயப்பன் – ராஜேஸ்வரி .  இவரது தந்தை ஒரு வழக்கறிஞர் ஆவார். ஸ்ரீதேவியின் இயற்பெயர் ஸ்ரீஅம்மா. சினிமாவிற்காக தனது பெயரை ஸ்ரீதேவி என மாற்றி கொண்டார்.  இவர் தேசிய விருது, பல்வேறு மாநில அரசு விருதுகள் என பல விருதுகளை பெற்றவர். 
தொடர்ந்து  50 ஆண்டுகள் திரைத்துறையில்   காமெடி முதல் கனமான பாத்திரங்கள் வரை அனைத்திலும் முத்திரை பதித்தவர்.   இவரது  அமைதியான குணம் ,  அட்டகாசமான நடிப்பு, அன்பான சுபாவம் இவருக்கு அடுத்தடுத்து சினிமாவில் பெரும்புகழை ஈட்டித் தந்தது.   இந்தியாவின்   உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை 2013ம் ஆண்டு பெற்றார்.  இறுதியாக ஸ்ரீதேவி ‘இங்கிலீஷ் விங்கிலிஷ்’ ‘ மாம்’  படங்களில்   நடித்தார். இவருக்கு  ஜான்வி, குஷி என்ற இரு மகள்கள்  . அவர்கள் இருவருமே தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்கள்.  ஸ்ரீதேவி  யாரும் எதிர்பாராத வண்ணம் 2018ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி துபாயில் ஓட்டலில்  மாரடைப்பால் குளியல் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார்.  இந்திய சினிமா உள்ள காலம் வரை ஸ்ரீதேவியின் புகழ் ரசிகர்களால் நினைவு கூரப்படும். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web