ஸ்ரீதேவியின் 2வது மகளும் காதலை உறுதிப்படுத்தினார்... குஷி கபூருக்கு குவியும் வாழ்த்துக்கள்!

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி ஏற்கெனவே காதலை உறுதிப்படுத்தி, காதலருடன் அடிக்கடி திருப்பதி சென்று பெருமாளை தரிசித்து வரும் நிலையில், தற்போது இரண்டாவது மகள் குஷி கபூரும் தனது காதலை உறுதிப்படுத்தி உள்ளார். இந்தி திரை உலகில் குஷி கபூர், அறிமுகமாகி படங்களில் நடித்து வரும் நிலையில், குஷி கபூர் அணிந்திருக்கும் நெக்லஸ் காதலை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
குஷி கபூரும், நடிகர் வேதாங் ரெய்னாவும் 'ஆர்ச்சிஸ்' என்ற படத்தில் இணைந்து நடித்தனர். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே காதல் உருவாகி காதலித்து வருவதாகவும், பல்வேறு இடங்களுக்கு டேட்டிங் செல்வதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த செய்திகளை இருவரும் ஏற்கவோ, மறுக்கவோ இல்லை.
குஷி கபூர் அணிந்திருக்கும் நெக்லஸ் அவர்களது காதலை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அவர் அணிந்திருக்கும் நெக்லசில் 'வி' என்ற எழுத்தும், 'கே' என்ற எழுத்தும் இரண்டுக்கும் நடுவில் 'லவ்' சிம்பிளும் உள்ளது. இதை அடுத்து குஷி கபூர் தனது காதலை உறுதிப்படுத்தி இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!