ஸ்ரீரங்கத்தில் தேர் திருவிழா... ரெங்கா, ரெங்கா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் ... !

 
ஸ்ரீரங்கம்

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் உத்திர வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 26-ம் தேதி தங்க கருடவாகனத்திலும், நேற்று மாலை தங்க குதிரை வாகனத்திலும் நம்பெருமாள் வலம் வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் தைத்தேர் மண்டபம் வந்தார். ரதரோஹணம் நிகழ்ச்சிக்குப் பிறகு காலை 6 மணிக்கு பக்தர்கள் “ரெங்கா, ரெங்கா” என்ற கோஷத்துடன் தேரை இழுத்தனர். தேர் நான்கு உத்திர வீதிகள் வழியாக சென்று காலை 9.15 மணிக்கு நிலையை அடைந்தது.

தேரின் முன் பக்தர்கள் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர். நாளை சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா நிறைவு நாளான 2-ம் தேதி மாலை நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைவதுடன் தைத்தேர் திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தலைமையில் அலுவலர்கள் செய்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!