எஸ் ஆர் எம் கல்லூரி மாணவிகளின் "அக்னி சிறகே"! மகளிர் தின கொண்டாட்டம்!

 
எஸ் ஆர் எம் கல்லூரி மாணவிகள்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள திருச்சி  எஸ் ஆர் எம் கல்வி குழும வளாகத்தில் " அக்னி சிறகே" உலக மகளிர் தினத்தை கல்லூரி மாணவிகள் கொண்டாடினார்கள். 

இருங்களூர் ஊராட்சியில் உள்ள எஸ் ஆர் எம் கல்வி குழும வளாகத்தில் அக்னி சிறகே  உலக மகளிர் தினத்தை, மாணவிகள் கொண்டாடினார்கள். திருச்சி மற்றும் ராமாவரம் எஸ் ஆர் எம் கல்விக் குழும வளாக தலைவர் டாக்டர் ஆர். சிவக்குமார் வழி காட்டுதலின் படி மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரேவதி தலைமையில் இன்று ‘அக்னி சிறகே’ நிகழ்ச்சி நடைபெற்றது.

எஸ் ஆர் எம் கல்லூரி மாணவிகள்

இதில் சிறப்பு விருந்தினராக 2021 ஆம் ஆண்டு மிஸ்ஸஸ் இந்தியா டைட்டில் வின்னர் மற்றும் ஃபேஷன் மாடல் ஜெனிஷா சரோன் ஷா,சமூக சேவகர், திருச்சி மாவட்ட அனைத்து பெண்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜாம்பகா ராமகிருஷ்ணன், மொராய் சிட்டி இயக்குனர் பிரியா மொராய்ஸ்,சன் டிவி மாஸ்டர் செப் டைட்டில் வின்னர் தேவிகா விஜயராமன், வில்வித்தை சாம்பியன் செல்வி சுபஸ்ரீ  உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளுக்கு பெண்களின் முக்கியத்துவம் குறித்தும்,பெண்களின் அனைத்து துறைகளின் பங்களிப்பு குறித்தும் மாணவிகளுக்கு உற்சாகம் மட்டும் வகையில் சிறப்புரையாற்றினார்கள்.

எஸ் ஆர் எம் கல்லூரி

இதை தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டனர். பின்னர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின்  மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல்,  நர்சிங் உள்ளிட்ட கல்லூரியின், முதல்வர்கள் பேராசிரியர்கள் மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web