விஜய்யை யாரும் விமர்சிக்காதீங்க... ஸ்டாலின் அமைச்சர்களுக்கு கடும் உத்தரவு!

 
விஜய் ஸ்டாலின்
 

2026ல் தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு  சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்களே மீதம் உள்ள நிலையில்  அனைத்து அரசியல் கட்சிகளும்  தேர்தலை எதிர்கொள்ள இப்போதே தயாராகிவருகின்றன. தமிழகத்தில் கடந்த முறை அ.தி.மு.க. தொடர் வெற்றியை (2011, 2016-ம் ஆண்டுகளில்) பெற்றதுபோல், இந்த முறை நாம் பெற்றுவிட வேண்டும் என்று தி.மு.க. கங்கணம் கட்டிக் கொண்டு பணிகளில் களம் இறங்கியுள்ளது.  இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, விஜய், சீமான் என 5 முனைப் போட்டி நிலவ வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில், மார்ச் 14ம் தேதி தமிழக சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு முன்பு கடைசியாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இதுதான். 

விஜய் ஸ்டாலின்

இதனால் அதிரடி அறிவிப்புகளுக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்ப்பு நிலவுகிறது.  இதுகுறித்த தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 25ம் தேதி முதல்வர்   ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  பட்ஜெட்டையும் தாண்டி அரசியல் குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக இந்த  கூட்டத்தில், ஸ்டாலின், "அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வெற்றியை மட்டுமல்லாது, மாவட்டத்தில் உள்ள பிற தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றியையும் உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியிருக்கிறார். மேலும்,"பொறுப்பு அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்" என்றும் உத்தரவிட்டு இருக்கிறார்.

விஜய் ஸ்டாலின்


அத்துடன், "தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை பற்றி யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம்" என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  "அப்படி ஏதாவது பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், கட்சி தலைமையில் இருந்து கருத்து தெரிவிக்கப்படும்" என்றும் சொன்னாராம். 'விஜய் பற்றிய விமர்சனங்கள் கூடாது' என்ற உத்தரவு அமைச்சர்களையும், தி.மு.க. தொண்டர்களையும் யோசிப்பில் ஆழ்த்தியுள்ளது.  இதுகுறித்து, அரசியல் விமர்சகர் ஒருவரிடம் கேட்டபோது, "பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் ஒவ்வொரு கருத்துக்கும் பதில் அளித்ததால்தான் இன்றைக்கு அவர் அரசியலில் முக்கியத்துவம் பெற்றுவிட்டார். அதேபோன்ற நிலையை விஜய்க்கும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் இந்த முறை  தி.மு.க. தலைமை இந்த முடிவை எடுத்திருக்கலாம்" என கூறியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web