திணறும் காங்கிரஸ்... ஆட்சியில் பங்கு கிடையாது... ஸ்டாலின் திட்டவட்டம்!

 
ராகுல் ராகுல்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் காங்கிரஸுக்கு “மெகா ஆஃபர்” வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தால் 100 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவியும் வழங்கப்படும் என உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக, ராகுல் காந்தி முடிவெடுக்க தாமதிக்கிறார் என்ற தகவல்களும் பரவியுள்ளது.

ராகுல்

இந்த நிலையில், திமுக தலைமை மு.க. ஸ்டாலின் புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளார். காங்கிரஸுக்கு 25 முதல் 28 தொகுதிகள் (அதிகபட்சம் 30) வழங்க தயாராக இருப்பதாகத் திமுக தெரிவித்துள்ளது. ஆனால், அமைச்சரவையில் பங்கினை வழங்குவது தொடர்பான பேச்சிற்கு இடமில்லை. அதே சமயம், காங்கிரஸை கௌரவப்படுத்தும் வகையில் சில மாற்று அதிகாரப் பகிர்வு திட்டங்களை முன்வைத்து, துணைச் சபாநாயகர் பதவி, 5 அரசு வாரியத் தலைவர் பதவிகள், பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் மற்றும் நலவாரியத் தலைவர்களின் இடங்களில் குறிப்பிட்ட சதவீத இடங்களை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்டாலின்

திமுக மூத்த நிர்வாகிகள் கூறுவது: “காங்கிரஸை மதிக்கிறோம், ஆனால் திராவிடக் கட்சிகளின் பெரும்பான்மை கொள்கையால் அமைச்சரவையில் இடமளிக்க முடியாது. துணைச் சபாநாயகர் மற்றும் வாரியத் தலைவர்கள் பதவிகள் மிகப்பெரிய அங்கீகாரம். இதை ஏற்றுக்கொள்வதும், நிராகரிப்பதும் காங்கிரஸின் முடிவில் உள்ளது.”

இந்நிலையில், விஜய் தரப்பின் “துணை முதல்வர்” வாக்குறுதியை நம்பி காங்கிரஸ் வெளியேறும் தாராளமா அல்லது திமுக வழங்கும் அதிகாரங்களை ஏற்று பழைய கூட்டணியிலேயே தொடருமா என்பதற்கான தீர்மானம் ராகுல் காந்தியின் விரைவிலான முடிவில் தான் நின்று உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!