நாளை திமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை!

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் நாளை ஜூன் 28ம் தேதி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - சார்பு அணிச் செயலாளர்கள் தொகுதி கூட்டம் நாளை மாலை 6.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - சார்பு அணிச் செயலாளர்கள் - தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவையில் வரும் ஜூலை 7ம் தேதி முதல் சுற்றுப்பயணத்தை தொடங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!