இன்று ஆகாய நடை மேம்பாலத்தை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!!

 
ஆகாய நடை மேம்பாலம்

சென்னையின்  கூட்டநெரிசல் மிகுந்த பகுதிகளில் குறிப்பிடத்தக்கது தி.நகர். வியாபார பகுதியான தி.நகரில் நடைபாதை கடைகள் முதல் மல்ட்டி ப்ளோரிங் கம்பெனிகள் வரை குண்டூசி ,துணிமணிகள், பாத்திரங்கள் முதல் வைரம், பிளாட்டினம் வரை  எல்லாமே வாங்க முடியும். அதனால் இந்த பகுதியில் எந்நேரமும் கூட்டநெரிசல் தான்  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தியாகராய நகரில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆகாய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

ஆகாய நடை மேம்பாலம்

அதன்படி  தியாகராய நகர் வரும் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தியாகராய நகர் மேட்லி சாலை சந்திப்பு வரை ஆகாய மார்க்கமாக நடந்து செல்லும் வகையில் இந்த ஆகாய நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு வந்தது.  நடுவில்  கொரோனா  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மேம்பாலப் பணிகள் தாமதம் அடைந்தன.  கடந்த ஓராண்டாக மீண்டும்  மேம்பாலம் அமைக்கும் பணிகள்விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தது. 570 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பாலத்தில் தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில்  இந்த மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.  

ஆகாய நடை மேம்பாலம்

இந்த பாலத்தில் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி செல்லும் வகையில் சக்கர நாற்காலி வசதியும் செய்யப்பட்டு உள்ளது. தியாகராய நகர் பேருந்து நிலையத்தை ஒட்டி  நகரும் படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. மாம்பலம் ரயில் நிலையம் மற்றும் உஸ்மான் சாலையில் தலா ஒரு மின் தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன.  மேம்பாலம் முழுவதுமே மின் விளக்குகளும், கண்காணிப்பு கேமரா வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாம்பலம் காவல்நிலையத்தில் இருந்து இந்த கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.  ஆகாய நடை மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு தியாகராய நகரில் இனி கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web