அண்ணா தான் இன்னும் தமிழ்நாட்டை ஆளுகிறார்... முதல்வர் ஸ்டாலின் உருக்கமான பதிவு!

 
அண்ணா அண்ணா
 

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் அண்ணாவின் சிலை மற்றும் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அண்ணா தமிழர்களின் மனசாட்சி என குறிப்பிட்ட அவர், நினைவு நாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணாவை நினைப்பதே திமுகவின் வழக்கம் என தெரிவித்துள்ளார்.

அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அண்ணாவின் பெயர் நிலைத்து இருப்பதாக அவர் கூறினார். மொழித் திணிப்பு, பண்பாட்டுத் திணிப்பு, நிதி நெருக்கடி போன்றவற்றுடன் வரும் பாஜக அரசின் ஆணவத்துக்கு அண்ணாவின் தமிழ்நாட்டில் இடமில்லை என்றும், ஆண்டுகள் எத்தனை ஆனாலும் தமிழ்நாட்டை ஆளுவது அண்ணாதான் என்றும் ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!