மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு? ஸ்டாலின் குற்றச்சாட்டு!
விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.254.29 கோடி மதிப்பிலான 29 திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்யும் ‘என் கனவு என் எதிர்காலம்’ திட்டத்தையும் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.390 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளையும் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த சிறப்புத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி திட்டங்கள் வழங்கப்படவில்லை என அவர் கடுமையாக விமர்சித்தார். ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு தேர்தல் காலத்தில் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிற்கு பெயரளவிலும் திட்டங்கள் வழங்கப்படவில்லை என்று கூறினார். மத்திய அரசு தமிழ்நாட்டை புறக்கணிக்கிறது என்றும், முந்தைய பட்ஜெட்டுகளில் இடம்பெற்ற திருக்குறள் மேற்கோள்கள்கூட இப்போது இல்லை என்றும் அவர் கிண்டலாக பேசினார்.
அதே நேரத்தில் திமுக அரசின் சாதனைகளையும் அவர் பட்டியலிட்டார். தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியதாகவும், 1.4 கோடி மனுக்களுக்கு தீர்வு வழங்கியதாகவும் தெரிவித்தார். மக்களின் தேவைகளை கவனித்து அரசு செயல்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். இந்த பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
