பிறந்தநாள் கொண்டாட்டம் எளிமையாக இருக்கட்டும்... தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!

 
Stalin

 

தமிழ்நாடு முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைவருமான மு.க. ஸ்டாலின் வரும் மார்ச் 1ஆம் தேதி தனது 73வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு கட்சி தொண்டர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். ஆடம்பர விளம்பரங்களை தவிர்க்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளார். படாடோப கொண்டாட்டங்கள் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

Stalin

அனுமதிக்கப்பட்ட நெறிமுறைகளுக்குள் மட்டுமே நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என கூறியுள்ளார். உற்சாகம் எல்லை மீறக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார். பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, முதியோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு உதவி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். ரத்ததானம், நூல்கள் வழங்குதல், கட்சி கொடிகள் புதுப்பித்தல் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இப்போதே தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். “ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்” என்ற முழக்கம் பரவிக் கொண்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். ஆடம்பரத்தை தவிர்த்து ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபடுவதே சிறந்த பிறந்தநாள் வாழ்த்து என தொண்டர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!