பொங்கலுக்கு அனைத்து பூசாரிகளுக்கும் புத்தாடை... முதல்வர் அதிரடி!
மயிலாப்பூர் பகுதியில் நடைபெற்ற கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். பூசாரிகளின் நலனை உயர்த்த 11 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இது திராவிட முறை ஆட்சியின் “எல்லோருக்கும் எல்லாம்” கொள்கைக்கான சான்று என்றார். உண்மையான இறைபற்றாளர்கள் விரும்பும் ஆட்சி இதுவே என வலியுறுத்தினார். சொல் அல்ல, செயல் தான் எங்கள் அடையாளம் என்றார்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நாளில் அனைத்து பூசாரிகளுக்கும் புத்தாடை வழங்கப்படும் என அறிவித்தார். பூசாரி உயிரிழந்தால் வாரிசுக்கு வழங்கும் நிதி ஐம்பதாயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்படும் என்றார். இயற்கை எய்தியவர்களின் இறுதி சடங்கிற்கு பத்தாயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த அறிவிப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அரங்கில் கைதட்டல் முழங்கியது.
கிராமக் கோயில் பூசாரிகளுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு எழுபத்தைந்தாயிரத்தில் இருந்து ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரமாக உயர்த்தப்படும் என்றார். இதனால் அதிகமானோர் அரசு நலத்திட்ட உதவிகளை பெறலாம். பொருளாதார நிலையும் சமூக மரியாதையும் உயரும் என கூறினார். இந்த மாநாடு அரவணைப்பின் அடையாளம் என வலியுறுத்தினார். அனைத்து தரப்பினரையும் இணைக்கும் ஆட்சியே எங்கள் நோக்கம் என்றார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
