நாளை மு.க. ஸ்டாலின் 73வது பிறந்தநாள்: அண்ணா நினைவிடம் முதல் அறிவாலயம் வரை !
திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது 73வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். காலை ஆழ்வார்பேட்டை இல்லத்திலிருந்து புறப்பட்டு அண்ணா நினைவிடம் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து கலைஞர் நினைவிடம், வேப்பேரியில் உள்ள பெரியார் திடல் ஆகிய இடங்களில் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் கோபாலபுரம் இல்லம் உள்ளிட்ட இடங்களில் மரியாதை செலுத்தி குடும்பத்துடன் எளிமையாக பிறந்தநாளை கடைப்பிடிக்கிறார். காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்து தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளை பெறுகிறார்.
பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில், ஏழை எளிய மகளிர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு உதவிகள் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். கட்சிக் கொடிகளை புதுப்பித்தல், படிப்பகங்களுக்கு புதிய நூல்கள் வழங்குதல், ரத்ததானம் போன்ற சமூக பணிகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஆடம்பரத்தை தவிர்த்து ஆக்கப்பூர்வ பணிகளே உண்மையான வாழ்த்து என தெரிவித்துள்ளார்.
மேலும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இப்போதே திட்டமிட்டு பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். “ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்” என்ற கோஷம் பரவட்டும் என கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் சென்னை நோக்கி வர தொடங்கியுள்ளனர். அண்ணா அறிவாலயத்தில் லட்சக்கணக்கானோர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
