நல்லா படிங்க... இன்ஸ்டா பிரபல சிறுவர்களை சந்தித்த முதல்வர்… வைரலாகும் வீடியோ!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாத்திப்பட்டை பகுதியைச் சேர்ந்த தேவா, ஜீவா என்ற சகோதரர்கள் சமூக வலைதளத்தில் வெளியிடும் வீடியோக்களால் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளனர். “ஹாய் காய்ஸ் நான் உங்கள் தேவா” என்று தொடங்கி கருத்துகள் பகிரும் இவர்களின் பதிவுகள் இணையத்தில் விரைவாக பிரபலமாகி வருகின்றன. குறிப்பாக ஒரு திரைப்படப் பாடலை பாடிய பின்னர் அவர்கள் அதிக கவனம் பெற்றனர்.
படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க... எனக் கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாவில் கலக்கும் சிறுவர்கள்!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 14, 2026
தேவா, ஜீவா உடன் உங்கள் ஸ்டாலின்.#VibeWithMKS pic.twitter.com/o0nDSkJYZL
இந்நிலையில் இளம் தலைமுறையினரை சந்திக்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த சிறுவர்களை நேரில் அழைத்து சந்தித்தார். அவர்களுடன் பேசும் வீடியோவை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அந்த விடியோ தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
வீடியோவில், எல்லா பதிவுகளிலும் படிக்க வேண்டும் என்று கூறுவதால் தான் உங்களை அழைத்தேன் என்று முதல்வர் கூறுகிறார். அதற்கு பதிலளித்த சிறுவர்கள் எதிர்காலத்தில் ஆட்சியரும் காவல்துறை அதிகாரியும் ஆக வேண்டும் என்று தெரிவித்தனர். படிப்பை எந்த சூழலிலும் விடக்கூடாது என்று முதல்வர் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
