"ஸ்டாலினின் கனவு பலிக்காது; குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!" - புதுக்கோட்டையில் கர்ஜித்த அமித்ஷா!
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் அரசியல் பயண நிறைவு விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் முழக்கத்தை உரக்கப் பதிவு செய்தார்.
மேடையில் உரையாற்றிய அமித்ஷா, திமுக அரசை 'குடும்ப ஆட்சி' என விமர்சித்தார்: "ஸ்டாலின் அவர்களின் ஒரே நோக்கம் தனது மகன் உதயநிதியை முதலமைச்சராக்குவதுதான். ஆனால், அந்த கனவு ஒருபோதும் நிறைவேறாது. தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. மேலும், சோனியா காந்தி தனது மகன் ராகுலை பிரதமராக்கத் துடிப்பது போல, ஸ்டாலின் தனது மகனுக்காகத் துடிப்பதாகக் குறிப்பிட்டு, இரண்டுமே நடக்காது எனச் சூளுரைத்தார்.

பாஜக மற்றும் அதிமுக இடையேயான கூட்டணி குறித்துப் பேசிய அவர், இது ஒரு 'வெற்றி கூட்டணி' என்று வர்ணித்தார்: "வரும் தேர்தல்களில் பாஜகவும், அதிமுகவும் இணைந்து செயல்பட்டு திமுக ஆட்சியை அகற்றும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) ஆட்சி தமிழகத்தில் மலரும்."
2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் இணைந்து போட்டியிட்டிருந்தால், சுமார் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும் என்று ஒரு புதிய அரசியல் கணக்கையும் அவர் முன்வைத்தார்.

தனது உரையின் தொடக்கத்தில், "மிகவும் தொன்மையான தமிழ் மொழியில் என்னால் உரையாற்ற முடியாததற்காக மன்னிப்புக் கோருகிறேன்," என்று கூறிய அமித்ஷா, புதுக்கோட்டையை 'சோழ சாம்ராஜ்யத்தின் பூமி' எனப் புகழ்ந்து தள்ளினார். தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளில் மிகக் குறைந்த அளவே நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்தார். அமித்ஷாவின் இந்த அதிரடிப் பேச்சு, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிராக பாஜக - அதிமுக கூட்டணி மிகத் தீவிரமாகத் களம் இறங்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
