ஸ்டாலின் ஆவேசம்... துணியைக் கட்டி உண்மையை மறைக்க இது பாஜக மாடல் அல்ல, திராவிட மாடல்!
இந்நிலையில், முதல்வர் வருகையை முன்னிட்டு, பந்தல்குடியில் 2 கி.மீ. தூரத்துக்கு தூர்வாரப்படாத கால்வாயை ஜமுக்காளம் போட்டு மறைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் இரவு நேரத்தில் அந்த இடத்திற்ககே மாலை சென்று, அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் பார்வையிட்டு, கால்வாயைத் தூய்மைப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தற்போது இது குறித்து திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ”ரோடுஷோ வழியில் பந்தல்குடி என்னுமிடத்தில் பகுதியை முதல்வரான என் பார்வைக்குப் படாதபடி கால்வாயைத் துணியைக் கட்டி மறைத்திருக்கிறார்கள் என சமூக வலைதளங்களில் செய்தி வெளியாக, அது குறித்து விமர்சனக் கருத்துகளும் பதிவான நிலையில், உடனே அதனை அகற்றச் சொன்னேன்.

அதுமட்டுமன்றி அந்த இடத்திற்கு மாலை சென்றபோது, என் வாகனத்தை விட்டு இறங்கி, அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் பார்வையிட்டு, கால்வாயைத் தூய்மைப்படுத்தும் பணிகள் என்ன நிலையில் இருக்கின்றன என்ற விவரத்தையும் கேட்டு, அதனை விரைவுபடுத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளேன்.
துணி மறைப்பு கட்டி, உண்மை நிலையை உலகத் தலைவர்களின் கண்களிலிருந்து மறைக்கும் பா.ஜ.க. மாடல் இதுவல்ல, இது திராவிட மாடல். மறைப்பை அகற்றி, மறைக்கப்படுவதைக் கண்டறிந்து, உடனடியாக முழுமையான தீர்வுக்கான வழி செய்யும் மாடல் என்பது பொதுமக்களுக்கு மட்டுமின்றி, கழகத்தை விமர்சிப்பதையே முழுநேர – பகுதிநேரத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களுக்கும் புரிந்திருக்கும்” என பதிவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
