சர்க்கரை நோய், புற்றுநோயை 'பழைய சாதம்' தடுக்கும் - ஸ்டான்லி மருத்துவமனை ஆய்வில் உறுதி!
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற அறிவியல் கருத்தரங்கில், பழைய சாதத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட நன்மைகள் குறித்து விளக்கப்பட்டன. இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இரைப்பை குடல் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் ஜெஸ்வந்த் தலைமையிலான குழுவினர் கடந்த 5 ஆண்டுகளாகப் பல்வேறு அரிசி வகைகளைக் (பொன்னி, மாப்பிள்ளை சம்பா, சிவப்பரிசி போன்றவை) கொண்டு இந்த ஆய்வை நடத்தினர்.
100 கிராம் சாதாரணச் சாதத்தில் 3 மி.கி. மட்டுமே இரும்புச் சத்து இருக்கும். ஆனால், அதுவே பழைய சாதமாக மாறும்போது அதன் அளவு 70 மி.கி. ஆக உயர்கிறது. இது ரத்த சோகையை (Anemia) அடியோடு நீக்க உதவும். சாதம் 8 முதல் 14 மணி நேரம் ஊறும் போது, அதில் 'ப்ரோபயோடிக்' (Probiotic) எனப்படும் உடலுக்கு நன்மை தரும் நன்னுயிரிகள் கோடிக்கணக்கில் உருவாகின்றன.பழைய சாத நீர் குடல் சார்ந்த பாதிப்புகளைக் குறைப்பதோடு, இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.

யார் யாருக்குப் பலன்?
கர்ப்பிணிப் பெண்களுக்கு பேறு கால ரத்த சோகை மற்றும் சர்க்கரை நோயைத் தடுக்கிறது. குழந்தை ஆரோக்கியமாக வளர உதவுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. புற்றுநோய் பாதிப்பு வராமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகிர்ந்த தகவல்:
"நான் சிறுவயது முதலே வாரம் இருமுறை பழைய சாதம் சாப்பிடுகிறேன். இனி 7 நாட்களும் பழைய சாதம் சாப்பிட முடிவெடுத்துள்ளேன். பழைய சாத விழிப்புணர்வு தினம் கொண்டாடுவது குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்படும்" என்றார்.
எப்படித் தயாரிப்பது சிறந்தது?
கோடை காலங்களில் 8 முதல் 10 மணி நேரம் ஊறவைக்கலாம். அதே சமயம் குளிர் காலத்தில் 10 முதல் 14 மணி நேரம் வரை ஊற வைப்பது சிறந்தது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
