திரையுலகில் சோகம்...பிரபல தனுஷ் பட இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார்!

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி. இவர் 'ஏப்ரல் மாதத்தில்' என்ற படத்தினை இயக்கியதன் மூலம் பிரபலமாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் எஸ்.எஸ்.ஸ்டான்லி. சில வருடங்கள் மகேந்திரனிடம் சினிமாவை கற்றுக்கொண்ட அவர்; அடுத்ததாக ரோஜா கூட்டம், பூ, சிகப்பு மஞ்சள் பச்சை, பிச்சைக்காரன் படங்களை இயக்கிய சசியிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
மகேந்திரன் மற்றும் சசி ஆகியோரிடம் கிட்டத்தட்ட 12 வருடங்களாக உதவி இயக்குநராக இருந்த அவர் கடந்த 2002ம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து 'புதுக்கோட்டையில் இருந்து சரவணன், மெர்க்குரி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை' படங்களை இயக்கினார். அதன்பிறகு, நடிப்பில் கவனம் செலுத்திய அவர், 'ராவணன், ஆண்டவன் கட்டளை, சர்கார்', பொம்மை நாயகி' என பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான 'மகாராஜா' படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், உடல் நலக்குறைபாடு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.எஸ்.ஸ்டான்லி இன்று காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை வளசரவாக்கம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!