இன்று முதல் இயக்கம்... பழமையை மீட்டெடுக்கும் 'சென்னை உலா' - பாரம்பரியக் கட்டிடங்களைச் சுற்றிப் பார்க்க சிறப்புப் பேருந்துகள்!
லண்டனுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பழமையான மாநகராட்சிகளில் ஒன்றான சென்னையின் வரலாற்றுச் சிறப்புகளைச் சுற்றுலாப் பயணிகள் எளிதாகக் கண்டு ரசிக்கத் தமிழக அரசு இந்தப் புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
இந்தப் பேருந்துகள் ஆரம்பக் காலத்தில் சென்னையில் ஓடிய பேருந்துகளை நினைவுபடுத்தும் வகையில் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 5 பேருந்துகள் இதற்காகப் பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் பல்லவன் இல்லம் வரை மொத்தம் 16 முக்கிய வழித்தடங்களில் அமைந்துள்ள பாரம்பரியக் கட்டிடங்களை இந்தப் பேருந்துகள் கடந்து செல்லும்.
ஒருமுறை பயணிக்க வெறும் 50 ரூபாய் மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு பேருந்து நிலையங்களுக்கு வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை இயக்கப்பட உள்ளது. மற்ற நாட்களில் (திங்கள் - வெள்ளி): மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
