ரயிலில் இருந்து தவறி விழுந்த ஸ்டேஷன் மாஸ்டர்... பணி செய்யும் இடத்திலேயே உயிரிழந்த சோகம்!

 
அனுசேகர் ஸ்டேஷன் மாஸ்டர்

மதுரை அருகே கள்ளிக்குடி ரயில் நிலையத்தில், ரயிலில் ஏற முயன்ற ஸ்டேஷன் மாஸ்டர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். தான் ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்த ரயில் நிலையத்திலேயே உயிரிழந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அனுசேகர். இவர் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். 32 வயதாகும் இவருக்கு திருமணமாகி 4 மாத கைக்குழந்தையும் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக அனுசேகர் நியமிக்கப்பட்டவர். அப்பகுதியிலேயே வாடகை வீட்டில் வசித்து வந்த படி வேலைக்கு சென்று வந்தார். குடும்பத்தினரை பார்க்க அவ்வப்போது சொந்த ஊருக்கும் சென்றும் வந்தார்.

ரயில் நிறுத்தம்
இந்நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு அனுசேகருக்கு பணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், பணி நேரத்திற்கு முன்பாக மதுரை சென்று வர முடிவு செய்திருந்த அனுசேகர், செங்கோட்டையில் இருந்து ஈரோடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கள்ளிக்குடி  ரயில் நிலையத்திற்கு வந்த போது, அந்த ரயிலில் ஏற முயன்றார். அப்போது திடீரென கால் தவறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் அனுசேகர் விழுந்ததால் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பள்ளி மானவி தற்கொலை

இது குறித்து தகவல் அறிந்ததும் விருதுநகர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார்  வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர், அதே ரயில் நிலையத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web