பத்திரமா இருங்க மக்களே... வெயில் பாதிப்பால மூணு மாசத்துல 15,000 பேர் மரணம்! வானிலை அமைப்பு தகவல்!

 
வெயில்

படுபயங்கரமான சம்பவம்... ரொம்ப பத்திரமா இருங்க மக்களே... வெயில் பாதிப்பால மட்டுமே கடந்த மூன்று மாதங்களில் 15,000 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண வெயில் தானேன்னு ஒதுக்கி வைக்க முடியாது. நம்ம தமிழ்நாட்டுல கடந்த சில வருடங்களாக தான் இப்படி உடம்பு முழுக்க எரிகிற மாதிரியான வெய்யிலைப் பார்க்கிறோம். தலைநகர் டெல்லி போன்ற இடங்களில் எல்லாம் அப்படி தான் காலங்காலமாகவே வெயில் இருந்து வருகிறது. பல நாடுகளில் கால நிலை மாற்றத்தால் இரவு 7 மணிக்கு கூட சுட்டெரிக்கிற வெயில் உண்டு. தற்போது உலகின் பல இடங்களில் வெப்பம், மழை, பனிக்காலம் என எல்லாமே பருவம் தப்பி மாறி மாறி வருகிறது. இந்நிலையில் உலகின் பல பகுதிகளில் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் இதுவரை இருந்த வெப்பநிலையை விட தற்பொழுது அதிகமாக உள்ளது. இந்த கோடை ஐரோப்பாவையும் விடவில்லை. ஐரோப்பாவில் கடந்த 2022ஆம் ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு 40க்கும் மேற்பட்ட டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்துள்ளது.

உலக வானிலை அமைப்பு

முன்னதாக, உலக வானிலை அமைப்பு புதிய வருடாந்திர காலநிலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கடந்த ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட அசாதாரண வெப்பம், பல நாடுகளில் பதிவு செய்யப்பட்ட வெப்பநிலையை விட அதிகமாக இருந்தது. இந்த வெப்பநிலைக்கு குறைந்தது 15,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கடந்த 2022ஆம் ஆண்டில் கோடை காலத்தில், ஸ்பெயினில் சுமார் 4,600 பேர், ஜெர்மனியில் 4,500 பேர், ஐக்கிய இராச்சியத்தில் 2,800 பேர், பிரான்சில் 2,800 பேர் மற்றும் போர்ச்சுகலில் 1,000 பேர் அதிக வெப்பநிலையால் இறந்துள்ளதாகவும் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக வானிலை அமைப்பு

அதுமட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள 95 மில்லியன் (9.5 கோடி) மக்கள் ஏற்கனவே காலநிலை மாற்ற காரணங்களால் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web