என் காதலனோட சேர்த்து வைங்க... கடவுளுக்கு கடிதம் எழுதி தூது போக சொன்ன இளம்பெண்... வைரலாகும் கடிதம்!

 
திருப்பதி

காதலுக்கு கண் இல்லை என்பது காலம் காலமாக கூறப்பட்டு வரும் பழமொழி. இந்த வரிகளை நிரூபிக்கும் வகையில் ஏதோ ஒரு சம்பவம் அரங்கேறி தான் வருகிறது. அந்த வகையில் இளம்பெண் ஒருவர்  கடவுளுக்கே கடிதம் எழுதிய சம்பவம் பேசுபொருளாகி உள்ளது.

திருப்பதி
கர்நாடக மாநிலம், திருப்பதி வெங்கட் ரமண சுவாமி கோயிலில் உண்டியல் நிறைந்ததும் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்த பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் முதல் கோயில் ஊழியர்கள் வரை பலர் கலந்து கொண்டு  காணிக்கையை எண்ணிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த உண்டியலில் பணத்துடன் கடிதம் ஒன்று இருந்துள்ளது. இதனை கண்ட ஊழியர்கள் அந்த கடிதத்தை பிரித்து படிக்கத் தொடங்கினர்.  

அந்தக் கடிதத்தில், "திருப்பதி திம்மப்பா நான், உன் சன்னதிக்கு வந்து வணங்குகிறேன். என்னையும் எனது காதலனையும் சேர்த்து வையுங்கள். அவர் என்னை விட்டுப் போகாமல், இன்னும் அதிகமாக நேசிக்க செய்யுங்கள். நாங்கள் இருவரும் விரைவில் ஒன்று சேர வேண்டும். அவர் என்னை அலுவலகத்தில் வந்து பார்க்க வேண்டும். நான் அவரை பற்றி எப்படி உணர்கிறேனோ, அதேபோல் அவரும் என்னை உணர செய்ய வேண்டும்" என எழுதப்பட்டிருந்தது.

இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!! திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!!

இந்நிலையில், தற்போது இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கடிதத்துக்கு நெட்டிசன்கள் ஏம்மா இதே கடிதத்த காதலனுக்கு எழுதினாலே மேட்டர் ஓவர்... கடவுளை ஏன் தொந்தரவு பண்றீங்க...அவர் என்ன மேட்ரிமோனியலா வச்சு நடத்திட்டிருக்கார்? என பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?