ஸ்டெட் டவுன் கில்லர் முகமது யூனுஸ் ... மோடி தங்கியிருந்த மாளிகை அருகே கோஷம்.. அமெரிக்காவில் பரபரப்பு!

 
மோடி


வங்கதேசத்தில்  அந்நாட்டு  வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிராக 2024ல்  மாணவர்கள் போராட்டம் வெடித்து பெரும்  வன்முறையானது. இதனையடுத்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
தற்போது வங்கதேசத்தில் முகமது யூனுதலைமையில் இடைக்கால அரசு நடத்தப்பட்டு வருகிறது. இவர் பாகிஸ்தான் ஆதரவாளர். இதனால் தற்போது வங்கதேசத்துக்கும் இந்தியாவுக்கும்  இடையேயான உறவு என்பது மோசமாகி உள்ளது. வங்கதேசம் உருவாக பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக இந்தியாவின்  வீரர்கள் தான் போரிட்டு வெற்றி பெற்றனர். அந்த நன்றியை மறந்து முகமது யூனுஸ் தற்போது பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டி வருகிறார். மேலும் ஷேக் ஹசீனா மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி உடனடியாக அவரை வங்கதேசத்துக்கு நாடு கடத்த வேண்டும் என முகமது யூனுஸ் அரசு இந்தியாவுக்கு மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்து வருகிறது.

டிரம்ப் மோடி


ஆனால் நம் நாடு அவரை நாடு கடத்த இன்னும் இசைவு தெரிவிக்கவில்லை. ஷேக் ஹசீனாவின் பாதுகாப்பு கருதி இன்னும் வங்கதேசத்துக்கு அனுப்பி வைக்கவில்லை. அவரை  தொடர்ந்து ரகசிய இடத்தில் வைத்து பாதுகாத்து வருகிறோம்.  இதனால் வங்கதேச அரசு கோபமாகி  நம் நாட்டை சீண்டி வருகிறது. அதுமட்டுமின்றி வங்கதேசத்தில் வசிக்கும் அவாமி லீக் கட்சியின் தலைவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவருக்கு இன்னல்களை கொடுத்து வருகிறது.  

ஹசீனா


இதனால் இடைக்கால அரசு மீது அவாமி லீக் கட்சியினர் கடும் கோபமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் பிரதமர் மோடி இப்போது அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் உள்ளார். அவர் வெள்ளை மாளிகையின் அருகே உள்ள பிளேர் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். அதன்பிறகு தான் அவர் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேசினார்.  முன்னதாக பிரதமர் மோடி தங்கியிருந்த பிளேர் விருந்தினர் மாளிகை முன்பு திரண்ட அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்கள் முகமது யூனுஸ் பதவி விலக வேண்டும் என கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், முகமது யூனுஸை கொலைகாரர் என்று கூறினர். ''ஸ்டெப் டவுன்.. ஸ்டெப் டவுன்.. கில்லர் யூனுஸ்.. கில்லர் யூனுஸ்.. '' என கோஷமிட்டனர்.
இதன்மூலம் கொலைக்காரரான முகமது யூனுஸ் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் பொறுப்பில் இருந்து பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் பிளேயர் ஹவுஸ் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?