ஜம்மு காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்கள் உடனடியாக தாயகம் திரும்ப நடவடிக்கை!

 
ஸ்டாலின்
 


 
ஜம்மு காஷ்மீர்  பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தீவிரவாத தாக்குதலையடுத்து  இந்தியா தரப்பில் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
 ஜம்மு
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீரில் கல்வி பயில சென்றுள்ள தமிழக மாணவர்கள், வெளிநாடு வாழ் தமிழர் நலவாரியத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு பவனும் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?