அதிர்ந்த பிபிஎல் அரங்கம் … 107 மீட்டர் சிக்ஸர் அடித்த ஸ்டீவ் ஸ்மித்!
பிபிஎல் தொடரில் சிட்னி சிக்ஸர் அணியின் ஸ்டீவ் ஸ்மித் 107 மீட்டருக்கு சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். சிட்னி தண்டர் நிர்ணயித்த 190 ரன்கள் இலக்கை நோக்கி சிட்னி சிக்ஸர் அணி விளையாடி வருகிறது. இந்த சிக்ஸர் போட்டியின் முக்கிய தருணமாக மாறியது.
YOU ARE JOKING!
— KFC Big Bash League (@BBL) January 16, 2026
Steve Smith has just hit a 107-metre six at the SCG. #BBL15 pic.twitter.com/vShVmqtXfe
முதலில் பேட்டிங் செய்த சிட்னி தண்டர் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அபாரமாக விளையாடினார். அவர் 110 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தண்டர் அணி தொடரில் இருந்து வெளியேறினாலும், இந்த ஆட்டம் பிளே ஆப்ஸ் கணக்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நாதன் மெக்ஆண்ட்ரூ வீசிய 3.3 ஓவரின் பந்தில் ஸ்மித் லெக் சைடில் அதிரடியாக சிக்ஸர் அடித்தார். பந்து மைதானத்தின் உச்சிக்கு சென்று தடுப்பில் மோதி கீழே விழுந்தது. இந்த சிக்ஸர் பிபிஎல் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
