வாரத்தின் முதல் நாளே ஜாக்பாட்... பங்குச்சந்தை சென்செக்ஸ் 480 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம்!
Jun 9, 2025, 10:40 IST
வார துவக்கத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் காலை வர்த்தகம் துவங்கியதுமே 480.01 புள்ளிகள் உயர்ந்து 82,669ல் தொடங்கி வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 157.05 புள்ளிகள் உயர்ந்து 25,160.10ல் வர்த்தகமாகிறது.

கடந்த வாரத்தின் இறுதி வா்த்தக நாளான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடா்ந்த நிலையில், மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் முடிவடைந்தன.

இதன் தாக்கம் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்றும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
