சிறுவர்கள் வெறிச்செயல்... ஆசிரியரை கல்லால் தாக்கி பணம், செல்போன் வழிப்பறி ...!

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த டேவிட் ராஜன் கிருஷ்ணகிரியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். டேவிட் ராஜ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பழைய பெங்களூரு சாலையில் நள்ளிரவு 2 மணிக்கு பேருந்துக்காக காத்திருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த மூன்று சிறார்கள் கற்களால் தாக்கி அவரிடம் இருந்த செல்போன் பணம் நகை ஆகியவற்றை கொள்ளை அடித்துச் சென்றனர். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
பாதிக்கப்பட்ட டேவிட் ராஜன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட டேவிட் ராஜன் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!