நெல்லை வந்தே பாரத் ரயில் மீது சரமாரி கற்கள் வீச்சு - 5 கண்ணாடிகள் உடைந்து சேதம்!
சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கிப் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் சரமாரியாகக் கற்களை வீசித் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில், ரயிலின் அடுத்தடுத்த பெட்டிகளில் இருந்த 5 கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.

நேற்று மாலை 6 மணியளவில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கும், தாழநல்லூர் ரயில் நிலையத்திற்கும் இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மர்ம நபர்கள் ரயில் மீது குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதால், பயணிகள் மிகுந்த அச்சமடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக விருத்தாசலம் ரயில்வே போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் தீபக் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

ரயில் மீது கற்களை வீசிய மர்ம நபர்கள் யார், இந்தக் கோரச் செயலுக்கானக் காரணம் என்ன என்பது குறித்து அப்பகுதி மக்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வேத் துறை எச்சரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
