அதிர்ச்சி... 30 பேரை கடித்து குதறிய தெருநாய்... அச்சத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

 
தெருநாய்
 

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு  கூமாபட்டியில்   தெருநாய் ஒன்று 30க்கும் மேற்பட்டோரை கடித்துவிட்டது. இதில் படுகாயம் அடைந்தவர்கள்  வத்திராயிருப்பு, விருதுநகர், மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தெருநாய்களின் எண்ணிக்கையும், தொல்லையும் அதிகரித்து வருவதால் அதனை  பிடிக்க முடியாமல் பேரூராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.

நாய்

நேற்றும் பொதுமக்கள், எருமை மாடு மற்றும் கன்றுக்குட்டியை அந்த தெருநாய் கடித்தது.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கூமாபட்டி பேருந்து நிலையத்தில் எருமை மாடு, கன்றுக்குட்டியோடு சுமார் அரை மணிநேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து  மக்கள் கலைந்து சென்றனர்.

கேரள நாய்

தெருநாய்கள் பிடிபடாமல் உல்லாசமாக சுற்றி திரிவதால் கிராமம் முழுவதும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தற்காப்புக்காக கையில் கம்புடன் சுற்றி வருகின்றனர். நாய் அச்சம் காரணமாக நேற்று சில பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது