தொடரும் சோகம்... 6 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்!
May 6, 2025, 11:00 IST
சமீபகாலமாக தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சென்னை வளசரவாக்கத்தில் 6 வயது சிறுவனை கடித்து குதறிய வளர்ப்பு தெருநாயால் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

தந்தையுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை பக்கத்து வீட்டில் வளர்க்கும் தெருநாய் கடித்து குதறிவிட்டது. சிறுவனுக்கு காது, கை, முகம் என பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுவனின் பெற்றோர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
