தெருநாய் விவகாரம்: Body Language-ஐ சுட்டிக்காட்டி மேனாகா காந்தியை கண்டித்த உச்சநீதிமன்றம்!
தெருநாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கில், நீதிமன்றம் எச்சரிக்கையுடன் கருத்து தெரிவிக்க வேண்டும் என மேனகா காந்தி தரப்பு வழக்கறிஞர் கோரிய நிலையில், நீதிபதிகளின் பதில் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. மேனகா காந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தனது கருத்துக்களைத் தெரிவிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதைக் கேட்டு அதிருப்தியடைந்த நீதிபதிகள், "நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சொல்லும் நீங்கள், உங்கள் கட்சிக்காரர் (மேனகா காந்தி) எப்படிப் பேசுகிறார் என்பதைக் கவனித்தீர்களா?" எனக் கேள்வி எழுப்பினர். "அவருடைய போட்காஸ்ட் (Podcast) வீடியோக்களைக் கேட்டீர்களா? அதில் அவருடைய பாடி லாங்குவேஜ் (உடல் மொழி) எப்படி இருக்கிறது? அவர் எதைப் பேசுகிறார், எப்படிப் பேசுகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என நீதிபதிகள் வினவினர்.

மேனகா காந்தி எதைப் பற்றியும், யார் மீதும் தனக்குப் பிடித்தமான கருத்துக்களைத் தொடர்ந்து பதிவிட்டு வருவதாகவும், ஆனால் நீதிமன்றம் பெருந்தன்மையுடன் அவர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் முன், மேனகா காந்தி தனது பேச்சிலும் செயல்பாட்டிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் மறைமுகமாக உணர்த்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
