கொடூரத்தின் உச்சம்... ஒரே நாளில் 13 நாய்கள் விஷம் வைத்துக் கொலை!

 
dogs dogs

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை கிராமத்தில், தெருக்களில் சுற்றித் திரிந்த 13 நாய்கள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை ஊர் மக்கள் எழுந்து பார்த்தபோது, ஆங்காங்கே நாய்கள் வாயில் நுரை தள்ளியபடி சடலங்களாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் உணவில் விஷம் கலந்து கொடுத்து, இந்த வாயில்லா ஜீவன்களைக் கொடூரமாகக் கொன்று குவித்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் விலங்கு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். "நாய்கள் குரைப்பதால் தூக்கம் கெடுகிறது என்றோ அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்திற்காகவோ இப்படி ஒரு அற்பத்தனமான காரியத்தைச் செய்த அந்தப் பாவி யார்?" என்று மக்கள் கொதித்துப் போய் உள்ளனர். உயிரிழந்த நாய்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன, அதன் பிறகே என்ன மாதிரியான விஷம் கொடுக்கப்பட்டது என்பது உறுதியாகத் தெரியும்.

தற்போது எட்டயபுரம் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, நள்ளிரவில் நடமாடிய நபர்களைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஒரு சில நாய்கள் கடித்ததாகப் புகார் எழுந்தாலும், அதற்காக இப்படி ஒட்டுமொத்தமாக விஷம் வைத்துக் கொல்வது சட்டப்படி குற்றம் என்று எச்சரித்துள்ள போலீசார், குற்றவாளிகளை விரைவில் கம்பி எண்ண வைப்போம் என உறுதி அளித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!