பள்ளிகளில் தெரு நாய் விழிப்புணா்வுப் பதாகைகள்... தமிழகம் முழுவதும் தலைமையாசிரிகளுக்கு பறந்த உத்தரவு!
தமிழகத்தில் கரோனா காலத்துக்குப் பிறகு தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பு சவாலாக மாறியுள்ளது. தெருநாய் கடி மற்றும் ரேபிஸ் பாதிப்புகள் அதிகரிக்கும் நிலையில், மாணவர்களை பாதுகாக்க பள்ளிக் கல்வித் துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பள்ளிகளில் காலை வணக்கக் கூட்டங்கள், அறிவிப்பு பலகைகள், பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்கள் மூலம் தெருநாய் அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும், தெருநாய்களுடன் மாணவர்கள் விளையாடவோ உணவளிக்கவோ கூடாது என்றும் தெரிவிக்க வேண்டும். நாய் கடி சம்பவம் ஏற்பட்டால் அதை உடனடியாக ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் தெரிவிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

பள்ளி வளாகத்தைச் சுற்றி தெருநாய்கள் இருப்பதை கண்டால் உடனே உள்ளாட்சி அமைப்புகளுக்கு தகவல் அளிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஒருங்கிணைப்பு அலுவலரை நியமித்து, வளாக பராமரிப்பு மற்றும் நாய்கள் நுழையாத வகையில் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பே முதன்மை என்ற செய்தியை இந்த வழிகாட்டுதல்கள் வலியுறுத்துகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
