சிபிஎஸ்இ எச்சரிக்கை... வினாத்தாள் கசிவு குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை!

 
சிபிஎஸ்இ

 இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி  15ம் தேதி தொடங்கியுள்ளன. ஏப்ரல் 4ம் தேதி வரை  தேர்வுகள் நடைபெறும் நிலையில்  சி.பி.எஸ்.இ. மூத்த அதிகாரி  சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவு என்றும், வினாத்தாளை பெற்றுத் தருவதாகவும் யூடியூப், பேஸ்புக், எக்ஸ் மற்றும் இதர சமூக வலைத்தளங்களில் சில சமூக விரோத சக்திகள் வதந்தி பரப்பி வருகின்றன.

சிபிஎஸ்இ

சி.பி.எஸ்.இ. கவனத்துக்கும் இத்தகவல் வந்துள்ளது.  இவையெல்லாம் அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள். மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே தேவையற்ற பீதியை உண்டாக்கி விடும்.  மாணவர்களும், பெற்றோரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.சி.பி.எஸ்.இ. உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளது.

சி.பி.எஸ்.இ

பொய்யான தகவல்களை பரப்புபவர்கள்  மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.ஒருவேளை, மாணவர்களே இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், சி.பி.எஸ்.இ. விதிகளின்படியும், இந்திய தண்டனை சட்டத்தின்படியும் அவர்கள் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே, பெற்றோர் தங்கள் பிள்ளைகள் இத்தகைய செயல்களில் ஈடுபடாமல் இருக்கும்படியும்  பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என அறிவுறுத்த வேண்டும் சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web