மார்ச் 1 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்… ரேஷன் ஊழியர்கள் எச்சரிக்கை!

 
strike

ரேஷன் கடை ஊழியர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா பல கோரிக்கைகளை முன்வைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் உள்ள எடை தராசையும், ரேஷன் கடை விற்பனை முனையத்தையும் இணைத்து சரியான எடையில் தரமான பொருட்கள் பொட்டலமாக வழங்க வேண்டும் என்றார். மேலும், ஊதிய மாற்ற குழு பரிந்துரையை உடனே வெளியிட்டு இளநிலை உதவியாளர் சம்பளத்தை ரூ.19,500 ஆக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

பொது வினியோக திட்டத்தை தனித் துறையாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ரேஷன் கடைகளில் கழிப்பறை வசதி இல்லாமல் ஊழியர்கள் அவதிப்படுவதாக கூறினார். முதற்கட்டமாக மாற்றுத்திறனாளி மற்றும் பெண் ஊழியர்களுக்காவது கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும் என்றும், பணியில் இருக்கும் போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடு வீடாக பொருட்கள் வழங்கும் பணிக்கு தேவையான செலவுகளை அரசு ஏற்க வேண்டும் என்றும், ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச் 1 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!